இன்றைய ராசிபலன்கள்.. கடக ராசிக்கு அனுகூலமான நாள்... விருச்சிக ராசிக்கு மாற்றமான நாள்...!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

ரிஷபம்:

குடும்ப விஷயங்களை அடுத்தவர்களிடம் கூறி ஆலோசனைகள் கேட்பதை தவிர்க்கவும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்:

வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும்.

கடகம்:

வாகனங்களால் தொழிலில் இலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும். உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்:

தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். உடன்பிறப்புகளிடம் கனிவாக பழகவும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பால் எண்ணிய இலாபம் உண்டாகும்.

கன்னி:

பேச்சுக்களில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பொருளதார நிலையில் சாதகமற்ற சூழல் உண்டாகும்.

துலாம்:

மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத வீண் அலைச்சல்கள் ஏற்படும். மனைவிவழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சகம்:

வெளிநாட்டு பயணங்களால் சாதகமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும்.

தனுசு:

எதிர்பாராத வரவுகள் உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தேவையற்ற மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு உண்டாகும். நெருக்கமானவர்களின் உதவிகள் கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

மகரம்:

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். பெண் ஊழியர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும்.

கும்பம்:

செய்யும் தொழிலில் மரியாதைகள் அதிகரிக்கும். ஆராய்ச்சி பணிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். இளைய உடன்பிறப்புகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். வாகனப் பயணங்களில் தேவையான ஆவணங்களுடன் செல்லவும். தாய்வழி உறவுகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும்.

மீனம்:

எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மனதில் தேவையற்ற கவலைகள் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகள் ஈடேறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nov 28 rasi palan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->