இன்றைய தினப்பலன்கள்... எந்த ராசிக்காரர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்? - Seithipunal
Seithipunal


மேஷம்:

மனதில் இனம்புரியாத பயம், கவலைகள் ஏற்பட்டு மறையும். மற்றவர்களின் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும்.

ரிஷபம்:

புதிய நபர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வெளிநாட்டு பயணங்களில் ஆர்வம் உண்டாகும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் ஆசைகள் நிறைவேறும். பிரிந்து சென்றவர்கள் நெருங்கி வருவார்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.

மிதுனம் :

சமூக பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத செய்திகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றும். இழுபறியாக இருந்துவந்த பணிகள் நிறைவடையும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

கடகம்:

தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். திட்டமிட்ட முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அரசு தொடர்பான பணிகளால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் இலாபம் பெறுவீர்கள். மாமன்வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும்.

சிம்மம்:

அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உடன் பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

கன்னி:

குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். வரவேண்டிய தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். செயல்பாடுகளின் தன்மை அறிந்து செயல்படவும்.

துலாம்:

எந்தவொரு செயல்களையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கஷ்டங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களின் உதவிகளால் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும்.

விருச்சகம்:

மனதிற்கு நெருங்கியவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மனதிற்கு விருப்பமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையளிக்கும். கடன் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தனுசு:

வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மகரம்:

வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.

கும்பம்:

எந்தவொரு செயல்களையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிலவும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

மீனம்:

நண்பர்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் இலாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சுப முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nov 27 rasi palan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->