இன்றைய (11-11-2019) ராசிபலன்கள்: இன்று... எந்த ராசிக்காரர்களுக்கு திடீர்யோகத்தால் பணமழை கொட்டப்போகிறது? - Seithipunal
Seithipunal


மேஷம்:

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருட்சேர்க்கைக்கான எண்ணங்களும், அதற்கான உதவிகளும் கிடைக்கும். கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தன-தானிய சம்பத்துக்களால் இலாபகரமான வாய்ப்புகள் அமையும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும்.

ரிஷபம்:

உடன்பிறப்புகளிடம் சற்று நிதானத்துடன் செயல்படவும். செய்யும் செயல்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். சமூக சேவையில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். 

மிதுனம்:

மூத்த உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அனுகூலமான சூழல் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான சூழலால் சில விரயங்கள் உண்டாகும். 

கடகம்:

வெளியூர் பயணங்களால் மாற்றமான சூழல் உண்டாகும். மனைவியுடன் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பயணம் சார்ந்த எண்ணங்களில் சாதகமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் புதியவர்களின் வருகைக்காக சுபவிரயங்கள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள்.

சிம்மம்:

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனதில் இருந்த பலவிதமான எண்ணங்களுக்கு தீர்வு காண முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அறப்பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர்பதவியில் இருப்பவர்களுக்கு அனைவரின் ஆதரவும், அனுகூலமும் கிடைக்கும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். 

கன்னி:

வாகனப் பயணங்களில் நிதானத்துடன் செல்லவும். தொழில் சார்ந்த எண்ணங்களை மற்றவர்களுடன் பகிரும்போது கவனம் வேண்டும். இயந்திரங்களில் பணிபுரியும்போது கவனத்துடன் இருக்கவும். மனதில் புதுவிதமான மாற்றம் உண்டாகும்.

துலாம்:

தொழில் சார்ந்த முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். விளையாட்டு வீரர்களுக்கு இருந்துவந்த தடைகள் நீங்கும். மனதில் நினைத்த எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

விருச்சகம்:

தாய்மாமன் உறவு வகைகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தேவையற்ற குழப்பங்களை தவிர்த்து செய்யும் செயல்களை கவனத்துடன் செயல்படுத்தவும். கல்வி பயிலும் மாணவர்கள் பாடங்களை கவனத்துடன் படிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு:

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் செயல்களால் நற்பெயரும், செல்வாக்கும் உயரும். விவசாயம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் மற்றும் சமூகப் பொறுப்புகள் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

மகரம்:

வீடு, மனை வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். எதிர்பாராத திடீர் யோகங்களால் தனவரவுகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

கும்பம்:

சமூக சேவைகள் தொடர்பான முயற்சிகள் எண்ணிய பலனை அளிக்கும். இன்ப சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொந்தபந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி பெருகும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

மீனம்:

உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் இலாபகரமான சூழல் ஏற்படும். மனதில் தோன்றும் கவலைகளை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் தெளிவு பிறக்கும். வெளியூர் பயணங்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nov 11 rasipalan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->