இன்றைய (10-11-2019) ராசிபலன்கள்: இன்று மேஷ ராசிக்கு செல்வாக்கு அதிகரிக்கும்... கும்ப ராசிக்கு உயர்வு உண்டாகும்..! - Seithipunal
Seithipunal


மேஷம்:

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். குறுகிய தூர பயணங்களால் மாற்றம் உண்டாகும். பணியில் எடுத்த செயலை முடித்து காட்டுவதால் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

ரிஷபம்:

இன்பச் சுற்றுலா செல்வதற்கான செயல்திட்டம் வகுப்பீர்கள். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய ஆடைகளின் சேர்க்கை உண்டாகும்.

மிதுனம்:

தொழில் மேன்மைக்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் தோன்றிய தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும்.

கடகம்:

வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சுபச்செய்திகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ளவர்கள் சக பணியாளர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழல் உண்டாகும்.

சிம்மம்:

சம வயதினரிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். கடல் மார்க்க பணிகளில் சுமாரான இலாபம் கிடைக்கும். புதிய முடிவுகளை எடுக்கும்போது பிறரின் ஆலோசனைகளை கேட்டு முடிவு எடுக்கவும்.

கன்னி:

புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் பெருகும். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். கால்நடைகளின் மூலம் இலாபம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்த முயற்சிகள் எண்ணிய பலனை அளிக்கும்.

துலாம்:

அணிகலன்களின் சேர்க்கை உண்டாகும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். சுயதொழில் புரிவோருக்கு ஏற்பட்ட பண சிக்கல்கள் நீங்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். தலைமை அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

விருச்சகம்:

இணையதளம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதுவிதமான அனுபவம் உண்டாகும். சொந்த ஊர் பயணங்கள் மாற்றத்தை அளிக்கும். செய்தொழில் மேன்மைக்கான புதிய முயற்சிகள் நினைத்த பலனை அளிக்கும்.

தனுசு:

திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு உயரும். பெரியோர்களின் உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இறைப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படும். தலைமை பதவிக்கான வாய்ப்புகள் சாதகமாகும்.

மகரம்:

அலைச்சல்களால் வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். தொழிலில் பொருள் தேக்கநிலை உண்டாகும்.

கும்பம்:

புண்ணிய காரியங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் கூட்டாளிக்கு இடையேயான மனக்கசப்புகள் குறையும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும்.

மீனம்:

வாகனப் பயணங்களால் மாற்றமான சூழல் உண்டாகும். உறவுகளிடம் சற்று நிதானத்துடன் செயல்படவும். மனை அபிவிருத்திக்கான அலைச்சல்கள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் அலைச்சல்களால் சுபச்செய்திகள் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nov 10 rasipalan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->