தெரிந்த நவராத்திரி விழாவின்.. தெரியாத அதிசய குறிப்புகள்... என்னென்ன.! - Seithipunal
Seithipunal


மக்களை துன்புறுத்தி வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாட்கள் போரிட்டு 10வது நாளில் அவனை வதம் செய்து வெற்றி கொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவுக்கூறும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

நவராத்திரி பற்றி... தெரிந்ததும்... தெரியாததும்... படிச்சு தெரிஞ்சுக்கோங்க.!  - Seithipunal

நவராத்திரி பண்டிகையை முதன்முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.

அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

எல்லோரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால் தான் அம்பிகையின் அருள் கிடைக்கும்.

நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.

விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து, அதில் பெருமாளை எழுந்தருள செய்து பூஜை செய்வார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் நீங்கும்.

நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.

நவராத்திரி 9 நாட்களும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால் மிகுந்த பலன்கள் கிடைக்கும்.

நவராத்திரி விரதம் இருப்பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.

நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப்பேறு உண்டாகும்.

நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

நவராத்திரி நாட்களில் வரும் வெள்ளிக்கிழமை அன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து, புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து, ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரை பொங்கல் மற்றும் உளுந்து வடை நெய்வேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும் மிகுதியான பலன்கள் கிடைக்கும்..!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

navarathiri special stories


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->