நவராத்திரி : மூன்று தேவியின் சிறப்புகள் மற்றும் அம்சங்கள் என்னென்ன? நவகன்னிகை வழிபாடு.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொண்டாடப்படும் மற்ற பண்டிகைகளை போல நவராத்திரி திருவிழாவும் பல்வேறு கொள்கைகளுடன் கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி திருவிழா மூலம் நமது ஆன்மீக ஆற்றல் வெளிப்படுகிறது. 

லட்சுமி, துர்க்கை மற்றும் சரஸ்வதி ஆகிய மூவரின் கோட்பாடுகளை நாம் இந்த ஆன்மீக பயணத்தில் படைக்கிறோம். அதாவது, செல்வம், வீரம் மற்றும் கல்வி ஆகிய மூன்றையும் வாழ்வில் பெற இந்த நவராத்திரி வழிபாடு அவசியம் ஆகிறது.

துர்க்கை அம்மன் நெருப்பின் அழகுடன் ஆவேச பார்வை கொண்டவள். இவள் சிவபிரியை, இச்சா சக்தியான இவள் வீரத்தின் அடையாளம். வீரர்கள் போட்டியின் முடிவிலும் தொடக்கத்திலும் வழிபடும் தெய்வம் துர்க்கை தான். 

லட்சுமி மலரின் அழகு அருள் பார்வை கொண்டவள். செல்வத்தின் பிறப்பிடமாக விளங்குபவள். லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். பொன்னிற மேனியுடன் தாமரை ஆசனத்தில் இருப்பவள். நான்கு யானைகள் லட்சுமியை எப்பொழுதும் நீராட்டும். 

சரஸ்வதி வைரத்தின் அழகும் அமைதியான பார்வையும் கொண்டு பிரகாசிப்பவள். வெண் தாமரையில் அமர்ந்திருப்பவள் இவள். பிரம்ம பிரம்மா பிரியையான கல்வியின் தெய்வமாக கருதப்படும் சரஸ்வதி அனைவருக்கும் கல்வியை வழங்க கூடிய சக்தியாக இருக்கிறாள். 

நவ கண்ணிகை வழிபாடு:

10 வயது நிரம்பாத கண்ணிகிகளாக இருப்பவர்களை வழிபடுவதுதான் நவ கண்ணிகை வழிபாடு என்று அழைக்கப்படுகிறது. ஒரு சிலர் நவக்கணிகையாகவும் சிலர் நவ துர்க்கையாகவும் இந்த வழிபாட்டை நடத்துகின்றனர். 

உலகத்தை சக்தி மையமாக மாற்றுவதே இந்த நவராத்திரியின் உன்னத தத்துவம். அனைத்து இடங்களிலும், அனைத்து உருவங்களிலும் தேவி வியாபித்து இருக்கிறாள் என்பதை குறிப்பதற்காக தான் கொலு வைத்து வழிபாடு செய்கிறோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

navakannikkai vazhipadu special vazhipadu 2022


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->