முருகனை எப்போதெல்லாம் கற்சிலையாகவும்.. அலங்கார நிலையிலும் தரிசிக்கலாம்? - Seithipunal
Seithipunal


நாம் அனைவரும் இறைவனை பல தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், பல பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும் எனவும் வேண்டுகிறோம். அதில் முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக்கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக ஞானிகளெல்லாம் ஆண்டிக்கோலத்தை காண்பார்கள்.

செவ்வாய் கிரகத்திற்கு உரிய கடவுள் முருகன் ஆவார். மேலும் வீரம், தைரியம் இதற்கெல்லாம் உரியவர் செவ்வாய்.

முருகனை எப்போதெல்லாம் கற்சிலையாக தரிசிக்கலாம்?

தீராத பிரச்சனைகள் தீர அலங்காரம் இல்லாத முருகனை வணங்குதல் நன்று. சில பிரச்சனைகளால் தீர்ப்பு தள்ளிப் போகிறது என்றால் அதற்கு அலங்காரம் இல்லாத ஆண்டிக்கோல முருகன் வழிகாட்டுவார்.

தீராத நோய்க்கு முருகனின் ஆண்டிக்கோலத்தை தரிசிக்கலாம்.

மனக்குழப்பத்தில் இருப்பவர்கள் ஆண்டிக்கோலத்தில் உள்ள முருகனை வழிபடலாம். அவர்களுக்கு மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும்.

பேச இயலாதவர்கள், குறைபாடு உள்ளவர்கள், மன எழுச்சி, மன உளைச்சல் உள்ளவர்கள் எல்லாம் ஆண்டிக்கோலத்தை பார்த்தால் ஒரு சாத்வீகம், சமத்துவம் அவர்கள் மனதிற்குள் பாயும்.

எப்போது அலங்கார நிலையில் முருகனை வழிபடலாம்?

கல்யாணம் நடக்கும்போதும், வீடு விற்கும்போதும், வாங்கும்போதும், வீடு கட்டிய பின் கிரகப்பிரவேசம் செய்வதற்கு இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் உள்ள முருகனை தரிசிக்கலாம்.

நம்மால் சரி செய்யக்கூடிய விஷயங்களுக்கு ராஜ அலங்கார தரிசனம். நம்மால் முடியாது, மருத்துவராலும் முடியாது, யாராலும் முடியாது என்பது போன்ற விஷயங்களுக்கெல்லாம் ஆண்டிக்கோலம் மிக மிக உகந்த தரிசனக் கோலம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murugan dharisanam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->