இன்றைய ராசிபலன்கள்.. இந்த ராசிக்காரர்களுக்கு திறமைகள் வெளிப்படக்கூடிய நாள்.! - Seithipunal
Seithipunal


மேஷம்:

உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். வாகனம் தொடர்பான பயணங்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் குறைகளை சுட்டிக்காட்டுவதை தவிர்க்கவும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும். வெளியிடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்:

வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். உயர் அதிகாரிகளின் ஆதரவினால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்:

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளுடன் வெளியிடங்களுக்கு சென்று மனம் மகிழ்வீர்கள். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மற்றும் சிலரது புதிய அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

கடகம்:

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கூட்டுத்தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்:

வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்களின் ஆலோசனைகள் மூலம் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கன்னி:

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், பாராட்டுகளும் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்:

மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் விலகும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். புதிய ஒப்பந்தம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

விருச்சகம்:

புதிய செயல்கள் மற்றும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது சிந்தித்து செயல்படவும். தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். மனதில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு:

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கடன் தொடர்பான பிரச்சனைகள் ஓரளவு குறையும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். பேச்சுக்களில் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிக்கவும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும்.

மகரம்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மன்றம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். மனதில் பழைய சிந்தனைகளின் மூலம் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.

கும்பம்:

பழைய உறவினர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இழுபறிகள் அகலும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பொருளாதார நெருக்கடிகள் குறையும்.

மீனம்:

வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுபவம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். இணைய பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mar 05 rasi palan


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->