மேல்நோக்கு நாள் என்றால் என்ன? இத்தினத்தில் செய்ய வேண்டியவை..! - Seithipunal
Seithipunal


இதுவரை நட்சத்திரங்களின் குணநலன்கள் மற்றும் நட்சத்திரத்தில் என்னென்ன செயல்களை செய்யலாம்? என்பதை பற்றி தெரிந்து கொண்டோம். இனி நாட்காட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும் மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சமநோக்கு நாட்கள் என்றால் என்ன? அந்த நாட்களில் என்னென்ன வேலைகள் செய்யலாம்? என்பதை பற்றி பார்க்கலாம். 

இந்த நாட்கள் அனைத்தும் எதன் அடிப்படையில் பிரிவிக்கப்படுகின்றன என்பதைக் பார்த்தோமானால் இவைகள் அனைத்தும் நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே பிரித்து வகுக்கப்பட்டுள்ளன. 

அப்படியானால் இந்நாட்களுக்கு என்று தனித்தனி நட்சத்திரங்கள் உள்ளன. அவைகள் பின்வருமாறு 

மேல்நோக்கு நாளுக்குரிய நட்சத்திரங்கள் : 

ரோகிணி

திருவாதிரை

பூசம்

உத்திரம்

உத்திராடம்

திருவோணம்

அவிட்டம்

சதயம்

உத்திரட்டாதி போன்ற 9 நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். 

இந்த மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஊர்த்துவமுத நட்சத்திரங்கள் என்றழைக்கப்படும். மேல்நோக்கு நட்சத்திரம் உள்ள நாளில் மேல் எழும்பக்கூடிய செயல்களை செய்வது நன்மை அளிக்கும்.

மேல்நோக்கு நாளில் செய்ய வேண்டிய செயல்கள் :

மரம் நடுவதற்கு நல்ல நாள்.

மதில் சுவர் எழுப்ப உகந்த நாள். 

வீடு கட்டுவதற்கு சிறப்பான நாள்.

வாசற்படி அமைப்பதற்கு சிறந்த நாள்.

கொட்டகை அமைக்க நல்ல நாள்.

உயர் பதவி பெறுவதற்கு உகந்த நாள்.

வியாபாரம் தொடங்குவதற்கு சிறப்பான நாள்.

வீடு வாங்குவதற்கு ஏற்ற நாள்.

மேல்நோக்கி வளரக்கூடிய விதைகளை விதைப்பதற்கு சிறந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

malnokku naal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->