மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு செய்யட்ட வித்தியாசமான அலங்காரம்!! வியந்து பார்க்கும் பக்தர்கள்!!  - Seithipunal
Seithipunal


மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்தத் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். 

இதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. 

இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.

துணை சித்திரைத் திருவிழா: மதுரையில் சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா போன்றே மதுரைமாவட்டம் சோழவந்தானிலும்,மானாமதுரை யிலும், பரமக்குடியிலும் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறுகிறது.

வீரபாண்டி சித்திரைத் திருவிழா: தேனி அருகிலுள்ள வீரபாண்டியிலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலிலும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை தொடங்கி மறு செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறுகிறது.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு ஜொலிக்கும் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. அவற்றை இப்பொழுது காண்போம்.

நான்காம் நாள் மீனலோசனி பாசமோசனி: 

சிகப்பு அரிசி பச்சரிசி அலங்காரம்:


 

குண்டு மஞ்சள் அலங்காரம்:


 

தேங்காய் பத்தை அலங்காரம்:


 

கோல்டு பாயில் பேப்பர் அலங்காரம்:

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai meenatchi alangaram


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal