இந்தியளவில் இரண்டாம் இடத்தை பிடித்த மதுரை., சிறப்பான அங்கீகாரத்தை பெற்ற தமிழகம்! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் இரண்டாவது தூய்மையான, சுகாதாரமான புண்ணிய தலம் என்ற விருதை மதுரை மீனாட்சியம்மன் கோவில் பெற்றுள்ளது.

மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் முக்கிய புனித தலங்களை தேர்வு செய்யப்பட்டு, அதன் தூய்மை, சுகாதாரம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி சுமார் 25 நவீன மின்னணு கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் சுற்று பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது, இரட்டை குப்பைத் தொட்டிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.  துப்புரவு பணிக்கு 24 மணி நேரமும் பணியாளர்கள் கோவிலில் இருப்பதுடன், நவீன மண் கூட்டும் இயந்திரம், 63 காம்பேக்டர் பின்கள், 4 மினி காம்பேக்டர் லாரிகள், 15 சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திரங்கள், முதியவர்கள் மாற்று திறனாளிகள் ஆகியோரை அழைத்துச் செல்வதற்கு வசதியாக 5 நவீன பேட்டரி வாகனங்களும் உள்ளன.

இந்தநிலையில், இந்தியாவின் இரண்டாவது தூய்மையான, சுகாதாரமான புண்ணிய தலமாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டு, நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஸ்ரீகஜேந்திரசிங் ஷெகாவத், இணை மந்திரி ஸ்ரீரத்தன்லால் கட்டாரியா ஆகியோர் இரண்டாம் பரிசுக்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழை மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகனிடம் வழங்கினர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் இந்தியாவின் முதல் தூய்மையான புனித தலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madhurai temple has second place in india


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->