தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகம்.! விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்.! - Seithipunal
Seithipunal


தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் யாகசாலை பூஜைக்காக 110 குண்டங்கள் அமைக்கும் பணிகள் மூன்று பிரிவுகளாக பிரித்து நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி மாதம் 5- ஆம் தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ளது. டிசம்பர் மாதம் 2-ந்தேதி பாலாலயம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்துக்காக கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலை பூஜைக்காக 178 அடி நீளத்திலும், 108 அடி அகலத்திலும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு பகுதியில் தற்போது குண்டங்கள் அமைப்பதற்கானபணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிது. யாகசாலை பூஜைக்காக மொத்தமாக 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும், தஞ்சை பெரியகோவிலில் தொல்லியல் துறையின் சார்பில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் அனைத்தையும் பொங்கல் பண்டிகைக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kumbabishigam in thanjavur temple


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->