மறந்துறாதீங்க... நாளை கிருஷ்ண ஜெயந்தி... கிருத்திகை... தேய்பிறை அஷ்டமி!! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு தினங்களிலும் பல்வேறு விரதங்கள், பண்டிகைகள் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை ஆவணி மாதம் 06ஆம் தேதி.,

கிருஷ்ண ஜெயந்தி

கிருத்திகை விரதம்

தேய்பிறை அஷ்டமி அனுஷ்டிக்கப்படுகிறது.

இம்மூன்று விசேஷங்களும் ஒன்றாக வந்து அந்நாளை மேலும் சிறப்பூட்டுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி :

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. இந்நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை அலங்கரித்தும் கொண்டாடுவர்.

மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி என்றும், ஜென்மாஷ்டமி என்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் விரதம் இருந்து இனிப்புகள் படைத்து, கிருஷ்ண பாதங்கள் பதித்து, பஜனைகள், மந்திரங்கள் ஒலித்து கிருஷ்ணரை வழிபடுவர்.

கிருஷ்ண ஜெயந்தி நாளில் அனுஷ்டிக்கப்படும் விரதம் காலையில் தொடங்கி நள்ளிரவு 12 மணிக்கு ஜென்மாஷ்டமி பூஜை செய்து முடித்த பின்னர் தான் விரதம் முடிக்கப்படும்.

கிருத்திகை விரதம் :

ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

முருகப்பெருமானை வணங்க சஷ்டி திதி, விசாக நட்சத்திரம், கார்த்திகை மாதம், திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகியவை உகந்தவை.

கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.

ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகனின் அருளை பெறலாம்.

தேய்பிறை அஷ்டமி :

தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் எடுத்து, மகாதேவர் என்கிற சிவபெருமான் பூமிக்கு வந்தார். 

ஸ்ரீபைரவருக்கு பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.

இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும், தொழிலில் வளர்ச்சி காணவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.

தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். மேலும், நமது ஏழு ஜென்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களின் பாவ வினைகள் தீரத்துவங்கும். அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறுநொடியே நமது செல்வ செழிப்பும் அதிகரிக்க துவங்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

krishna janmashtami 3


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->