திருக்கார்த்திகை வீட்டில் ஒளிரும் தீபங்கள் விளக்கை தானாக அணையவிடாதீர்கள்.! - Seithipunal
Seithipunal


கார்த்திகை தீபத்திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது?

வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.

கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். திருக்கார்த்திகையான இன்று இல்லங்களில் வரிசையாக தீப அலங்காரம் செய்வது தீய சக்திகளை விலக்கும். வீட்டில் மகாலட்சுமி குடி கொள்வாள்.

எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

வீடுகளில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 தீபங்கள் ஏற்றுவது சிறப்பானது. 27 தீபங்கள் ஏற்ற முடியாத பட்சத்தில், குறைந்த பட்சம் 3 தீபங்களாவது ஏற்ற வேண்டும்.

முதல் விளக்கு உங்கள் குடும்பத்திற்காகவும்,

இரண்டாவது விளக்கு உங்கள் மூதாதையர்களை வழிபடும் பொருட்டும்,

மூன்றாவது விளக்கு உங்கள் எதிர்கால சந்ததிகள் நலமுற்று வாழ வேண்டும் என்பதற்காகவும் ஏற்றப்படுகிறது.

தீபம் ஏற்ற உகந்த நேரம் :

பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையும்,

மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையும் ஏற்றி வழிபட்டால் நன்மையை தரும்.

பிரதோஷ வேளையான மாலையில் 4.30 - 6.00 மணி சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும்.

விளக்கு தானாக அணையலாமா?

தீபம் ஏற்றியபின் விளக்கு தானாக அணையக்கூடாது. விளக்கு ஏற்றிய பின் அது தானாக கருகி அணைந்து விடும். கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக்கூடாது. பூவை பயன்படுத்தி விளக்கை குளிர்விக்க வேண்டும்.

எந்த விளக்கை ஏற்றினால் என்ன பலன்?

மண்ணால் செய்யப்பட்ட விளக்கு ஏற்றினால் பீடை விலகும்.

வெள்ளி விளக்கு ஏற்ற திருமகள் அருள் கிடைக்கும்.

பஞ்சலோக விளக்கு ஏற்ற தேவதை வசியம் உண்டாகும்.

வெண்கல விளக்கு ஏற்ற ஆரோக்கியம் உண்டாகும்.

இரும்பு விளக்கு ஏற்ற சனி கிரக தோஷம் விலகும்.

அறிவியல் ரீதியாக யோசிக்கலாம் வாங்க...

கார்த்திகை மாத தீபத்திருநாளில் மட்டுமல்லாமல் கார்த்திகை மாதம் முழுவதும் நம் முன்னோர்கள் தீபமேற்றி வழிபட்டனர். 

ஏன் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றி வழிபட்டார்கள்?

கார்த்திகை மாதத்தில் மழைக்காலமும், பனியும் சற்று இணைந்தே குளிருடன் காணப்படும். இதனால் சளி, காய்ச்சல் அதிகமாகவே இருக்கும். அதுமட்டுமின்றி இக்காலத்தில் சிறு சிறு பூச்சிகளும், கொசுகளும் உலாவும்.

இதை கட்டுப்படுத்தவே நல்லெண்ணெய், காட்டாமணக்கு, சிற்றாமணக்கு, பசு நெய், வேப்பெண்ணெய் மற்றும் பலவகை மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தி வீடெங்கும் தீபமேற்றப்பட்டது.

இதனால் கொசு மற்றும் பூச்சிகள் குறைந்து நோய்களும் கட்டுக்குள் இருக்கும். மேலும் பல்வேறு மூலிகைகளை இந்நாளில் தூபமாக எரிப்பதாலும் பல்வேறு நன்மைகள் விளைகின்றன. 

அறிவியல் ரீதியாகவும் கார்த்திகை தீபத்திருநாள் நமக்கு பல நன்மைகளை அள்ளி தருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karthigai dheepam special 2


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->