இவர்கள் எல்லாம் அத்திவரதரை தரிசிக்க வரவேண்டாம்., காவல் துறை திடிர் அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தில் அத்திவரதர் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டுள்ளார். இந்த விழா ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 17ஆம் தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வரும் நிலையில்.

37 வது நாளான இன்று, அத்திவரதர் நீலநிறப்  பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இன்று அதிகாலை முதலே பக்தர்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூர வரிசையில் நின்று சுமார் 4 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலை முதல் காலை 10.30 மணி வரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

அத்திவரதரை தரிசிக்க வரும் மக்கள் தங்களது வாகனங்களை காஞ்சிபுரம் நகர் பகுதியில் கொண்டு வந்ததால், காஞ்சிபுரம் காந்தி சாலை பெருமாள் கோவில் அருகே, காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லக்கூடிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், .பக்தர்கள் கூட்டம் அதிகமானால்  காஞ்சிபுர சுற்று வட்டார பகுதி உள்ளூர் மக்கள் தரிசனத்துக்கு வர வேண்டாம் என காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்து, கடந்த 5 நாட்களில் 12 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் 36 நாட்களில் சுமார் 57 லட்சத்து 50ஆயிரம் பக்தர்களும் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanjipuram police request local pepole


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->