அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில் வரலாறு! - Seithipunal
Seithipunal


மூலவர்    :    காமாட்சி அம்மன்.

தல விருட்சம்    :    செண்பக மரம் உள்ளது. 

பழமை    :    2000-3000 வருடங்களுக்கு முன்பு. 

ஊர்    :    காஞ்சிபுரம்.

மாவட்டம்    :    காஞ்சிபுரம்.

தல வரலாறு :

ஒரு சமயத்தில், பண்டாசுரன் என்கிற அசுரன், யாரையும் வெல்லும் வரமும், தன்னால் அடக்கப்பட்டவரின் பலம் முழுவதையும் தனக்கே கிடைக்கும் வகையிலான வரமும் பெற்றிருந்தான். ஆனாலும், அனைவருக்கும் மரணம் உண்டு என்ற பொதுவிதியின் அடிப்படையில், அவனுக்கு ஒன்பது வயது பெண்குழந்தையால் தான் மரணம் நிகழும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

அவனால் தேவர்களுக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டதால், அன்னை பராசக்தி காமாட்சியாக அவதாரம் எடுத்து, அவனை அழித்து இத்தலத்தில் எழுந்தருளினாள். கோபமாக இருந்த அம்மனை சாந்தப்படுத்துவதற்காக ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் ஏற்படுத்தி, உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினார்.

தல பெருமை :

அம்மனின் 51 சக்தி பீடங்களில், இத்தலத்தில் இருக்கும் சக்தி பீடம் காமகோடி சக்தி பீடம் ஆகும். காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது இதன் சிறப்பம்சமாகும். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :

திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலப் பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும். அம்மனை வழிபடுவோருக்கு ஐஸ்வர்யமான வாழ்வும் மனநிம்மதியும் ஏற்படுகிறது. இங்கு வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் அம்மனுக்கு புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

திருவிழா :

இத்தலத்தில் மாசி மாதத்தில் பத்துநாள் பிரம்மோற்சவம், புரட்டாசியில் நவராத்திரி திருவிழா, ஐப்பசியில் அவதார உற்சவம் ஆகியவை ஆண்டு திருவிழாக்கள். ஒவ்வொரு பவுர்ணமியும் சிறப்பு பூஜை நடக்கும். தமிழ் மற்றும் ஆங்கில வருடப்பிறப்பு, விஜயதசமி, தீபாவளி, பொங்கல் நாட்களில் அம்மன் தங்கரதத்தில் உலா வருவார்.

திறக்கும் நேரம் :

காலை 5 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

செல்லும் வழி : 

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மத்தியில் இக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு செல்ல அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamakshi amman temple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->