15 ஆண்டுகளுக்கு பிறகு மூலவர் மீது பட்ட சூரிய ஒளி.! பெரம்பலூர் அருகே சிறப்பு வழிபாடு.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டதத்திற்கு உட்பட்ட காளிங்கராயநல்லூர் என்ற கிராமத்தில் சக்திவாய்ந்த பச்சையம்மன் கோவில் இருக்கின்றது. கிபி பதினேழாம் நூற்றாண்டில் இந்த கோவிலானது கட்டப்பட்டது. இந்த கோவிலில் வருடா வருடம் ஆவணி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் பூமிதி ஆண்டு பெருவிழா நடத்தி கொண்டாடப்படும்.

அருகில் உள்ள ஊர்கள் மட்டுமல்லாமல், சில 100 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் மக்களும் வந்து பூமிதி ஆண்டு பெருவிழாவில் கலந்து கொண்டு வணங்கி பச்சையம்மன் அருளைப் பெற்றுச் செல்வது வழக்கம். 

kalingarayanallur, theemidhi thiruvizha, pachaiyamman kovil, seithipunal

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு கோவில் பூசாரி கணேசன் கோவிலை திறந்து பூஜை நடத்த தயார் செய்ய எத்தனித்தார். அப்போது அவர் ஆச்சரியப்படும் விதமாக கோவிலின் கிழக்கு வாயிலில் இருந்து சூரிய ஒளிக்கதிர்கள் கருவறையில் இருக்கும் பச்சையம்மன் திருமேனியில் பட்டு ஒளிர்ந்துள்ளது.

இதைப் பார்த்த பூசாரி மிகவும் ஆச்சரியம் அடைந்தார். 15 ஆண்டுகளுக்கு முன்னதாக பூசாரியின் தந்தை முருகேசன் இங்கே பூஜைகள் செய்து வந்த பொழுது சூரியகதிர் சுவாமியின் கர்ப்பகிரகத்தில் விழுந்துள்ளது. அப்பொழுது அதுகுறித்து தன்னுடைய மகனிடம் ஆச்சரியமாக அவர் கூறியுள்ளார்.

kalingarayanallur, theemidhi thiruvizha, pachaiyamman kovil, seithipunal

தற்போது 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படிப்பட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது என பூசாரி கணேசன் நெகிழ்சியுடன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஊர் பொதுமக்கள் அருகில் உள்ளவர்கள் அனைவரும் சென்று பச்சையம்மனின் இந்த அதிசயத்தை கண்டு பக்திப் பரவசத்துடன் வழிபட்டு செல்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kalingarayalannur pachaiyamman temple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->