கள்ளழகர் கோவிலில் நாளை தேரோட்டம்! - Seithipunal
Seithipunal


கள்ளழகர் கோவில்:
மதுரையை அடுத்த அழகர்கோவிலில் புகழ்பெற்ற கள்ளழகர் கோவில் இருக்கிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாத திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டில் ஆடி பெருந்திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்த திருவிழாவையொட்டி தினந்தோறும் மாலையில் ஆஞ்சநேயர், அன்னம், கருடன், சிம்மம்,சேஷ, யானை உள்ளிட்ட வாகனங்களில் சுந்தரராஜப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். திருவிழாவில் இன்று(புதன்கிழமை) இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

இந்நிலையில் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான ஆடி பிரமோற்சவ திருவிழாவாக தேரோட்டம் நாளை(வியாழக்கிழமை) நடைபெற இருக்கிறது. நாளைய தினம் காலை 5.15 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருத்தேருக்கு சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் எழுந்தருளுவார்.

 இதை தொடர்ந்து 7.31 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். அன்று இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 16-ந்தேதி தீர்த்தவாரியும் நடந்து, 17-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா முடிவடைகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kalazhagar temple festival


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->