உங்களது கட்டை விரல்கள் இந்த மாதிரி உள்ளதா? அப்போ நீங்க தான் ராஜா.!! - Seithipunal
Seithipunal


கட்டைவிரல் என்பது நமது கைகளில் முக்கியமான ஒரு விரல் ஆகும். இதுவே விரல்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. மற்ற விரல்களை விட கட்டை விரலானது ஒரு மனிதனின் வாழ்க்கை தேர்வுகளையும், பண்புகளையும் வெளிப்படுத்துகிறது. அத்தகைய கட்டைவிரலின் முக்கியத்துவத்தை பற்றி விரிவாக காண்போம்.

கட்டை விரல் முதல் பகுதி மனப்பாங்கையும், அதன் இரண்டாம் பகுதி பகுத்தறியும் தன்மையையும் குறிக்கிறது. பகுத்தறியும் பகுதி அளவில் சிறியதாகவும், முதல் பகுதி அளவில் பெரியதாகவும் இருந்தால் அவர்கள் வீண்பேச்சும், ஆடம்பரமும், அட்டகாசமும் உடையவர்கள்.

இரண்டு பகுதிகளும் சமமான அளவில் இருப்பது நல்லது. அப்படி சமமாக இருந்து இரண்டாவது பகுதி இடை போல் அழகாய் அமைந்து இருந்தால் இவர்கள் நம்பகமானவர்களாகவும், அறிவாற்றல் மிகுந்தவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும், நியாயம், நீதி, நேர்மை இவற்றுக்காக பாடுபடுபவர்களாகவும், அதற்காக தியாகம் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

கட்டை விரலானது மற்ற விரல்களை போல உயரமாக, உறுதியாக அமைந்திருக்குமானால் சற்று மந்தமாக இருப்பார்கள். சுற்றியுள்ள காலச் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள்.

மற்ற எல்லா விரல்களை விட கட்டை விரலானது பெரியதாக இருந்தால் எல்லாவித கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாக விளங்குவார்கள். நல்ல புத்திசாலிகளாகவும் விளங்குவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kairegai palan 12


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->