கடன் தொல்லையால் கஷ்டப்படுகிறீர்களா?... உங்களுக்கான பரிகாரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


கடன் பிரச்சனை என்பது எல்லாருக்குமே பொதுவாக இருப்பது தான். ஆனால் ஒவ்வொரு லக்னக்காரர்களுக்கும் குறிப்பிட்ட சில பரிகாரங்களை செய்யும் பொழுது கடன் முற்றிலும் தீரும்.

மேஷம் :

மேஷ லக்னக்காரர்களுக்கு இயல்பாகவே சிறு சிறு கடன் தொல்லைகள் இருக்கக்கூடும். முருகருக்கு செவ்வாய்க்கிழமையில் நெய் தீபம் ஏற்றி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்ய, சகல கடன் தொல்லைகளும் தீரும்.

ரிஷபம் :

ரிஷப லக்னக்காரர்களுக்கு சுக்கிரனோடு குரு சேரும் பொழுது கடன் தொல்லைகள் தீரவே தீராது. வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி, லட்சுமி அஷ்டோத்திரம் உச்சரித்து வர கடன்கள் மாயமாய் மறையும். 

மிதுனம் :

மிதுன லக்னக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் மகரம், மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் இருக்கும் பொழுது கடன் பிரச்சனைகள் ஏற்படும். ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமையில் அர்ச்சனை செய்து, செந்தூர காப்பு சாற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லையும் எளிதில் தீரும். 

கடகம் :

கடக லக்னக்காரர்களுக்கு குருபகவான் மிதுனம், கடகம், கன்னி, தனுசு ஆகிய ராசிகளில் இருக்கும் பொழுது கடன் தொல்லைகள் வலுவாகும். கடன் தொல்லைகள் தீர திருப்பதி சென்று வரலாம்.

சிம்மம் :

சிம்ம லக்னக்காரர்களுக்கு சனிபகவான் ரிஷபம், துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் இருக்கும் பொழுது கடன் தொல்லைகள் மேலோங்கி காணப்படும். சிவபெருமானை ஞாயிற்றுக்கிழமையில் வழிபடுவது சிறப்பான பலனை கொடுக்கும்.

கன்னி :

கன்னி லக்னக்காரர்களுக்கு சனிபகவான் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ஆகிய ராசிகளில் இருக்கும் பொழுது கடன் தொல்லைகள் ஏற்படும். மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி, வழிபட கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லையும் தீரும். 

துலாம் :

துலாம் லக்னக்காரர்களுக்கு குருபகவான் மேஷம், கடகம், தனுசு, மீன ராசியில் இருக்கும் பொழுது கடன் தொல்லைகள் ஏற்படும். ஆகவே வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வர, எல்லா கடனும் தீரும். 

விருச்சிகம் :

விருச்சிக லக்னக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் மிதுனம், கன்னி மற்றும் மகர ராசியில் இருக்கும் பொழுது கடன் பிரச்சனைகளை சுமக்க கூடும். இந்நேரத்தில் 45 நாட்களுக்கு தொடர்ந்து வீட்டில் முருகப்பெருமான் படம் வைத்து தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

தனுசு :

தனுசு லக்னக்காரர்களுக்கு சுக்கிர பகவான் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ஆகிய இடங்களில் இருக்கும் பொழுது கடன் தொல்லைகள் ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசியால் அர்ச்சனை செய்து, நெய்தீபம் ஏற்றி வர தீராத கடனும், நோயும் தீரும். 

மகரம் :

மகர லக்னக்காரர்களுக்கு புதன் பகவான் மிதுனம், கன்னி, விருச்சிக ராசியில் இருக்கும் பொழுது கடன் தொல்லைகள் உண்டாகும். இந்நிலையில் புதன்கிழமைதோறும் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் அனைத்து கடன்களும் நீங்கும். 

கும்பம் :

கும்ப லக்னக்காரர்களுக்கு சந்திரன் கடகம், சிம்மம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் இருக்கும் பொழுது கடன் தொல்லைகள் ஏற்படக்கூடும். இந்நிலையில் தொடர்ந்து ஆறு பிரதோஷங்கள் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் தீராத கடனும், நோயும் தீரும். 

மீனம் :

மீன லக்னக்காரர்களுக்கு சூரியன் மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகளில் இருக்கும் பொழுது கடன் தொல்லைகள் உண்டாகும். காலை வேளையில் சூரிய பகவானுக்கு செம்பருத்தி மலர்களால் அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா பிரச்சனையும் தீரு


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadan thollai neenga parikaram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->