இன்றைய (25.06.19) ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்களால் செலவு ஏற்படும்.! - Seithipunal
Seithipunal


மேஷம்:

இணையதளம் சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு ஆதரவான சூழல் அமையும். வியாபாரத்தில் சில சூட்சமங்களை கற்பீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மனதில் தோன்றும் பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். வெளிவட்டாரங்களின் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.

ரிஷபம்:

பணி சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த தனவரவில் காலதாமதம் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். புதிய ஆடைகளை வாங்கி மனம்  மகிழ்வீர்கள்.

மிதுனம்:

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் உயர்வு உண்டாகும். தனவரவிற்கான பணிகளில் ஈடுபடுவீர்கள். சுபச் செயல்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதி அதிகரிக்கும். பொதுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும்.

கடகம்:
 
வாடிக்கையாளர்களிடம் நிதானப்போக்கை கையாளவும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்படும். அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்காலம் சம்பந்தமான பணிகளை மேற்கொள்வீர்கள். கடன் தொல்லையால் மனவருத்தங்கள் நேரிடலாம். 

சிம்மம்:

மனதில் நினைத்த செயல்கள் ஈடேற காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

கன்னி:

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பணியில் திருப்திகரமான சூழல் உண்டாகும். மனதில் இருந்து வந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கலை சார்ந்த அறிவு மேம்படும். சாதுர்யமான பேச்சுகளால் உங்களின் மதிப்பு உயரும். 

துலாம்:

எண்ணிய செயல்களை முடிப்பதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனப் பயணங்களில் கவனத்துடன் இருக்கவும். பேச்சுகளில் நிதானம் வேண்டும். சக பணியாளர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களால் மனக்கசப்புகள் நேரிடலாம்.

விருச்சகம்:

குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பாராத பொருள் வரவு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வர்த்தகம் சம்பந்தமான பணியில் இலாபம் உண்டாகும்.

தனுசு:

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய தொழில் சம்பந்தமான அறிவுரைகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேற காலதாமதமாகும். 

மகரம்:

பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பணி உயர்விற்கான சூழல் உண்டாகும். அனுபவ அறிவால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளால் இலாபம் அதிகரிக்கும். திருத்தல பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

கும்பம்:

குடும்ப உறுப்பினர்களால் சுபச் செய்திகள் வந்து சேரும். இழுப்பறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்புகளை மறந்து கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். 

மீனம்:

மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி பிறக்கும். கவிதைகள் மீது நாட்டம் அதிகரிக்கும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதிற்கு பிடித்த சிலரின் வருகையால் மனதில் மாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணி உயர்வு ஏற்படும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

june 25 rasipalan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->