இன்றைய (13.06.19) ராசிபலன்: இன்று, இந்த ராசிக்காரர்களுக்கு உறவினர்கள் வருகையால் பிரச்சனை ஏற்படக்கூடும்.! - Seithipunal
Seithipunal


மேஷம்:

உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனையும், இலாபமும் மேம்படும். பயணம் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும்.

ரிஷபம்:

அலுவலகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் வேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகள்  அமையும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

மிதுனம்:

உயர் அதிகாரிகள் ஆதரவாக நடந்துகொள்வார்கள். பணி தொடர்பான வெளியூர் பயணங்கள் கைக்கூடும் . எதிர்பாராத பணவரவு உண்டாகும்.  உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பூர்வீகம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும்.

கடகம்:

உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.  மேலதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

சிம்மம்:

அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவது மேன்மையை அளிக்கும். தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். திருமணம் போன்ற சுப காரியத்திற்கான முயற்சிகள் கைக்கூடும். அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். 

கன்னி:

குடும்பத்தில் பொருளாதார நிலை மேம்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வரும் வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும்.

துலாம்:

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். பயணங்களினால் புதிய அனுபவம் மற்றும் ஆதாயம் கிடைக்கும்.  உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். 

விருச்சகம்:

பலவிதமான சிந்தனைகளால் மாற்றமான சூழல் அமையும். செயல்களில் தடை மற்றும் தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

தனுசு:

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தனவரவு மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணம் அறிந்து செயல்படவும். மனதில் நினைத்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

மகரம்:

தொழில் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  வீட்டில் மதிப்பும், மரியாதையும் உயரும். முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வாகனம் வாங்குவது பற்றிய முயற்சிகள் உண்டாகும். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளால்  முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம்:

வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள்  குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் செய்யும் வேலையில் திருப்தி ஏற்படும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். முயற்சிக்கேற்ற முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

மீனம்:

எதிலும் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். புதிய முயற்சிகளால் அலைச்சல்கள் உண்டாகும்.  பணி சார்ந்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். உடலில் ஒருவிதமான அசதியும், மனச்சோர்வும் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

English Summary

june 13 rasipalan


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal