17 ஆம் தேதிக்கு பிறகு காட்சி அளிக்கின்றாரா அத்திவரதர்? நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அனந்தஸரஸ் என்ற தீர்த்தத்தினுள் அத்திவரதர், அனந்த சயனராக ஆனந்த யோகம் கொண்டிருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த அத்திவரதர் அந்தத் திருக்குளத்தை விட்டு வெளியே வந்து தரிசனம் தருகிறார். இந்த கணக்குப்படி அடுத்த தரிசனம் இந்த ஆண்டு நமக்கு கிடைத்துள்ளது. அப்போது 48 நாட்கள் மட்டுமே வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பிறகு மறுபடியும் நீருக்குள் சயனம் கொள்ள ஆரம்பித்துவிடுவார்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் வெளியே எழுந்தருளும் அத்திவரதர், 1979ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி எழுந்தருளினார். அதன்பின் அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது. குளத்திற்குள் துயில் கொண்டிருந்த ஆதி அத்திவரதர், ஜூன் மாதம் 27ஆம் தேதி இரவு பரிகார பூஜைகளுடன் வெளியே எடுக்கப்பட்டார்.

40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டுள்ளார். இந்த விழா ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 17ஆம் தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் 48 நாட்கள் தரிசனத்துக்கு பின்னர் மீண்டும் வரும் 17 ஆம் தேதி மீண்டும் குளத்துக்கு உள்ளே வைக்கப்பட உள்ளார், இதனால் வரும் 17 ஆம் தேதி பக்தர்கள், வி.ஐ.பி  என யாருக்கும் அத்திவரதர் சுவாமி தரிசனம் கிடையாது என  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால் வரும் 17 ஆம் தேதி பக்தர்கள் யாரும் காஞ்சிபுரம் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், அத்திவரதர் தரிசன காலத்தை நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது பேசிய நீதிபதிகள் அத்திவரதர் தரிசன காலத்தை நீட்டிப்பது குறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்து தரிசன காலத்தை நீடிக்க மறுத்துவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jundgement in athivarathar case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->