இன்றைய (24.07.19) ராசிபலன்: இந்த ராசிக்காரர்கள் தடைகளை தாண்டி வெற்றி வெறுவீர்கள்.!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

புதிய நபர்களின் நட்பால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். சக பணியாளர்களால் தொழிலில் சாதகமான சூழல் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் கிடைக்கும்.

ரிஷபம்:

காதில் உண்டான பிரச்சனைகளில் வேதனைகள் குறையும். மறைப்பொருள் சம்பந்தமான ஞானத் தேடல் உண்டாகும். தர்ம ஸ்தாபனங்களின் உதவியால் நிர்வாகிகளுக்கு ஆதரவு கிடைக்கும். நண்பர்களிடம்  உரையாடும்போது பேச்சில் கவனம் வேண்டும்.

மிதுனம்:

புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும். போட்டிகளில் இலாபம் அடைவீர்கள். பங்காளிகளுக்கு இடையேயான உறவுநிலை மேம்படும். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். நினைவாற்றல் மேலோங்கும்.

கடகம்:

மனை சம்பந்தமான  தொழில் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். வாகனப் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தாயின் உதவியால் சாதகமான சூழல் அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும்.

சிம்மம்:
 
எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாக அமையும். பிறருக்கு உதவும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும். முக்கிய முடிவுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். இளைய சகோதரர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கி அமைதி உண்டாகும்.

கன்னி:

புதிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அனுசரித்து செல்லவும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். பேச்சில் கவனம் வேண்டும். அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். எதிலும் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்பட வேண்டும்.

துலாம்:

தொழிலில் மேற்கொள்ளும் புதிய யுக்திகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் மரியாதை உயரும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும்.

விருச்சகம்:

பொது நலத்திற்காக நன்கொடைகள் அளித்து மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கான மருத்துவ செலவுகள் உண்டாகலாம். பூஜை புனஸ்காரங்களில் மனம் ஈடுபடும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். திருமண வரன்கள் சாதகமாக அமையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

தனுசு:

பிள்ளைகளின் செயல்பாட்டால் இலாபம் உண்டாகும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். உடன் பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். தொழில் சம்பந்தமான சில சூட்சமங்களை கற்பீர்கள். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

மகரம்:

வெளிநாட்டு தொழில் தொடர்பான முயற்சிகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தைரியத்துடன் புதிய காரியங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு மேம்படும்.

கும்பம்:

சங்கீத இசைக் கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். திடீர் யோகத்தால் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். மனக்கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள். இணையதளம் சம்பந்தமான வேலைவாய்ப்புகளினால் மேன்மை உண்டாகும். மனைகளில் வீடு கட்டும் பணிகளை தொடங்குவீர்கள். 

மீனம்:

வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பால் தனலாபம் அடைவீர்கள். கணவன், மனைவியின் உறவில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். சபைகளில் ஆதரவு  பெருகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

july 24 rasipalan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->