இன்றைய (20.07.19) ராசிபலன்: இந்த ராசிக்காரர்கள் தடைகளை தாண்டி வெற்றி வெறுவீர்கள்.!! - Seithipunal
Seithipunal


மேஷம் :

சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். பணியில்  சாதகமான சூழல் நிலவும். தாயின் உடல் நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.

ரிஷபம்:

தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். பல நாட்களாக இருந்து வந்த சிக்கல்களை  அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள்.

மிதுனம் :

ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். தந்தை மற்றும் வாரிசுகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். நிர்வாகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். புண்ணிய யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். 

கடகம் :

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். வாகனப் பயணங்களில் கவனத்துடன் செல்லவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும்.

சிம்மம் :

கணவன், மனைவிக்கிடையே உள்ள வாக்குவாதங்கள் குறைந்து அன்பு அதிகரிக்கும்.  கூட்டாளிகளால் சாதகமான சூழல் அமையும்.  பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

கன்னி :

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். போட்டி, பந்தயங்களில் சாதகமான சூழல் அமையும். கையாளும் பொருட்களில் கவனத்துடன் செயல்படவும்.

துலாம் :
 
தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். 

விருச்சகம் :

உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். பொது நலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் ஆதரவான சூழல் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். தந்தைவழி சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள்  குறையும்.

தனுசு :

புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.

மகரம் :

நண்பர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.  சர்வதேச வணிகம் எதிர்பார்த்த பலன்களை தரும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல் அமையும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு பயணங்களால் கீர்த்தி உண்டாகும்.

கும்பம் :

எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

மீனம் :

வாரிசுகள்  மூலம் சுப விரயம் உண்டாகும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். உயர் கல்விக்கான முயற்சிகள் சாதகமான பலன்களை தரும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். வேள்விகளில் கலந்து கொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

july 20 rasipalan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->