இன்றைய (19.07.19) ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு செய்த முயற்சிகள் வெற்றி பெறும்.!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

தர்க்க விவாதங்களால் கீர்த்தி அடைவீர்கள். நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல் அமையும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

ரிஷபம்:
 
புதிய நபர்களின்  நட்பு கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். கூட்டு வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள்.

மிதுனம்:

எதிர்பார்த்த உதவிகளால் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இணையதளம் சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 

கடகம்:

உத்தியோகஸ்தரர்கள் சக பணியாட்களை அனுசரித்து செல்லவும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் சற்று அனுசரித்து செல்லவும். உடைமைகளில் கவனம் வேண்டும்.

சிம்மம்:

புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும்.

கன்னி:

வேலை தேடுபவர்களுக்கு முயற்சிக்கேற்ப நற்செய்திகள் கிடைக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். பணி சம்பந்தமாக புதிய இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.

துலாம்:

மாணவர்கள் கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். செய்தொழில் புரிபவர்கள் கவனத்துடன் இருக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.

விருச்சகம்:

தாயாரின் ஆதரவு கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.

தனுசு:

புதிய முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். விளையாட்டு வீரர்கள் போட்டியில் கவனத்துடன் ஈடுபடவும். கடல் மார்க்க பயணங்களால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தலைமை பதவியில் உள்ளவர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும்.

மகரம்:

குடும்ப உறுப்பினர்களால் சேமிப்பு அதிகரிக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். தலைமை பதவியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்:

வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாக்குவன்மையால் கீர்த்தி உண்டாகும். கருத்துக்களை பரிமாறும்போது நிதானம் வேண்டும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் வந்து போகும்.  வாகன பராமரிப்பு செலவுகள் உண்டாகும்.

மீனம்:

நீண்ட நாட்களாக எண்ணிய திட்டங்களை தைரியத்துடன் நடைமுறை படுத்துவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கான நுட்பமான பணிகளை மேற்கொள்வீர்கள். வாரிசுகளால் மகிழ்ச்சி உண்டாகும். எடுத்த செயலை பல்வேறு தடைகளை கடந்து செய்து முடிப்பீர்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

july 19 rasipalan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->