திருக்கணித பஞ்சாங்கம்... இன்று சனிப்பெயர்ச்சி... உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது? - Seithipunal
Seithipunal


மேஷம்:

வாரிசுகளின் மூலம் தொழில்வகை உதவிகள் கிடைக்கும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனத்தெளிவை அளிக்கும். பூர்வீக சொத்துக்களால் இலாபம் ஏற்படும். சுயதொழில் முனைவதற்கான உதவிகள் கிடைக்கும். அரசு சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு பணி உயர்வு உண்டாகும்.  கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

ரிஷபம்:

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். மனைகளால் மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். தாயாரின் ஆதரவு மனமகிழ்ச்சியை அளிக்கும். விவசாயம் சாந்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.

மிதுனம்:

பேச்சில் கவனம் வேண்டும். சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் சோர்வு உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகள் காலதாமதமாகும். உத்தியோக மாற்றம் சார்ந்த முடிவுகளில் நிதானம் வேண்டும்.

கடகம்:

உறவினர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனைவியின் உறவுகளால் ஆதாயமான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகளால் நன்மை உண்டாகும்.

சிம்மம்:

உடல் தோற்றப்பொலிவு மேம்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். ஞாபக மறதியால் சில செயல்களை தாமதமாக செய்து முடிப்பீர்கள். புதிய லட்சியங்களை உருவாக்குவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

கன்னி:

பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். குடும்ப பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.

துலாம்:

இணையதளம் சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். மூலிகை சம்பந்தபட்ட தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். உறவினர்களால் சுபவிரயம் ஏற்படும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

விருச்சகம்:

புதிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் வந்து போகும். வாகன பராமரிப்பு செலவுகள் உண்டாகும். இளைய உடன்பிறப்புகளால் சாதாகமான சூழல் உண்டாகும். பணி சம்பந்தமான புதிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்வீர்கள். வெளியூர் சம்பந்தமான வேலை வாய்ப்புகளில் சுபமான முடிவுகள் கிடைக்கும்.

தனுசு:

தலைமை பதவியில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். புண்ணிய யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாதத்திறமையால் எண்ணிய பொருள் இலாபம் உண்டாகும். 

மகரம்:

வாக்குறுதிகள் தருவதை தவிர்க்கவும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள்.

கும்பம்:

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாகும். கடல் மார்க்கப் பயணங்களால் எண்ணிய காரியங்கள் ஈடேறும். வாரிசுகளால் மகிழ்ச்சி உண்டாகும். பணியில் மந்தத்தன்மையால் காலதாமதம் ஏற்படும்.

மீனம்:

எடுத்த செயலை பல்வேறு தடைகளை கடந்து செய்து முடிப்பீர்கள். கூட்டாளிகளுக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் வந்து போகும். செய்தொழிலில் புதுவிதமான மாற்றங்களை செய்வீர்கள். புதிய முதலீடுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். பணிபுரியும் இடங்களில் உங்களின் மதிப்பு உயரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jan 24 rasipalan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->