சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் நடை திறக்கும் நாள்..! பக்தர்கள் பரவசம்.!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 9-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை என்று தெரிவித்துள்ளார்கள். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், தந்திரி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். திருவோண தினமான 11-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று மதியம் ஐயப்ப பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்படுகிறது.

இதை தொடர்ந்து 13-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அதன் பின்னர் அன்று இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மீண்டும் புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 16-ந் தேதி மாலையில் நடை திறக்கப்படும். 21-ந் தேதி வரை வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நேற்று திருவனந்தபுரம் தலைமைச்செயலகத்தில் முதல்- மந்திரி பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நடப்பாண்டில் ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நடைபெற்ற கூட்டத்தில், தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், தலைமைச்செயலாளர் டோம் ஜோஸ், போலீஸ் டி.ஜிபி. லோக்நாத் பெகரா மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

iyyappan temple opening date


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->