கிருஷ்ணகிரி: விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடிய இஸ்லாமியர்கள்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரியில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில்  இஸ்லாமியர்கள் பழவகைகள் மற்றும் மலர்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வழங்கி கொண்டாடினர்.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வகையில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை சீனிவாச நகரில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சமாதானம் மற்றும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மிலாடி நபி விழா குழுவின் சார்பில் வாழை, கொய்யா, ஆப்பிள் போன்ற பழவகைகள் மற்றும் மலர்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் 12-ஆவது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, மிலாடி நபி விழா குழுவினர் பழவகைகள் மற்றும் மலர்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வழங்கி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

islam people celebrate vinayaga chadurthi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->