வீட்டில் செலவு குறைந்து... வரவு அதிகரிக்க... இப்படி செய்தால் போதும்..!! - Seithipunal
Seithipunal


நாம் சம்பாதிக்கும் பணத்தை எதற்காக செலவிடுகிறோம்? என்கிற வரவு செலவு கணக்கை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். 

மாத சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும், தினமும் சம்பாதிக்கும் தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, முதலாளிகளாக இருந்தாலும் சரி நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு தொகையும் உங்கள் வியர்வையிலிருந்து கிடைத்தவை ஆகும். அந்த பணத்தை தேவையில்லாமல் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.

பொதுவாக பெரும்பாலான வீடுகளில் மாத சம்பளம் வாங்குபவர்களாக இருந்தால் அவர்களுடைய இல்லத்தரசிகள் கட்டாயம் அம்மாதம் என்னென்ன செலவுகளை செய்கிறோம்? என்கிற வரவு செலவு கணக்கை எழுதி வைப்பது வழக்கம். 

அப்படி அவர்கள் எழுதி வைக்கும் பொழுது நம்மிடம் எவ்வளவு இருக்கிறது? என்பதை அறிந்து செலவு செய்ய முடியும் என்பதால் தான் அவ்வாறு செய்கிறார்கள். இல்லையென்றால் கையில் எவ்வளவு இருக்கிறது என்பதே தெரியாமல் தாம் தூம் என்று செலவு செய்து விடுவோம். பிறகு பட்ஜெட்டில் பற்றாக்குறை விழுந்துவிடும். அப்படி நீங்கள் வரவு செலவு கணக்கை துவங்கும் பொழுது முதலில் பிள்ளையார் சுழி போட்டு துவங்குவது நல்லது. 

எந்த ஒரு எழுத்திலும் முதல் எழுத்தாக பிள்ளையார் சுழி இருப்பது தான் அதிர்ஷ்டம் பெருக வழி வகை செய்யும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதன் பிறகு நீங்கள் லாபத்தை அடைய விரும்பினால் அங்கு குங்குமத்தால் லாபம் என்று எழுத வேண்டும். 

குங்குமம் இல்லை என்றால் மஞ்சள் கொண்டும் லாபம் என்று எழுதலாம். லாபம் என்று எழுதும் பொழுது செலவைக் காட்டிலும் வரவு அதிகரித்து லாபம் அதிகரிக்க வேண்டும் என்பதை வேண்டுவதாக குறிப்பிடப்படுகிறது. இப்படி நீங்கள் எழுதிய அடுத்த பக்கத்தில் இருந்து வரவு செலவு கணக்கை துவங்க வேண்டும். 

அப்படி துவங்கும் பொழுது முதலில் வரவை எழுத வேண்டும். செலவை எழுதக்கூடாது. இவ்வளவு எனக்கு லாபம் வந்தது என்பதைத் தான் முதலில் எழுத வேண்டும். இப்படி நீங்கள் குறித்து வைத்துக் கொண்டு அன்றைய தேதியையும் குறிப்பிட்டு எவ்வளவு செலவு செய்திருக்கிறோம்? நமக்கு எவ்வளவு வரவு வந்திருக்கிறது? என்பதை தெரிந்து வைத்துக் கொண்டால் அதற்கேற்ப உங்களால் செலவு செய்ய முடியும். 

இதனால் குடும்பத்தில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. மேலும் லட்சுமி கடாட்சம் பெருகும். நீங்கள் எழுதும் இந்த டைரி அல்லது நோட்டுப் புத்தகத்தில் முன் பக்கம் மகாலட்சுமியின் படத்தை ஒட்டி வையுங்கள். 

மகாலட்சுமி உங்களுடைய வரவு செலவு கணக்கை கவனித்துக் கொள்வாள். அதன் பிறகு எந்த சிக்கலும் இல்லாமல் இருப்பதை வைத்து வாழ வேண்டும் என்பதை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

வரவு செலவு கணக்கு எழுதும் புத்தகத்திற்கு உள்ளே கட்டாயம் ஒரு பேனா இருக்க வேண்டும். அந்த பேனாவின் மூடி ஆனது திறந்து தான் வைத்திருக்க வேண்டும். இப்படி எல்லாம் செய்து பாருங்கள் நிச்சயம் உங்களுடைய வரவு லாபமாக அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

income and expenses tips


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal