எந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு திருமணம் நடைபெறும்? - Seithipunal
Seithipunal


திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். இல்லறத்தின் இனிய வரம். ஆனால் இது எல்லோருக்கும் இனிமையாக அமைவதில்லை.

பொதுவாக ஜாதக நிலையில் குடும்பஸ்தானமும், களத்திரஸ்தானமும் முக்கிய நிலைகளாகும். இவற்றுடன் அமையும் கிரக சேர்க்கையினால் குடும்பத்தில் பல குழப்பங்கள் நடைபெறுகிறது.

உறவுகளில் இனிய பந்தமான இல்லற வாழ்க்கையில் எந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு திருமணம் அமையும் என்பதை பற்றி பார்ப்போம்.

இரண்டு திருமணம் அமையும் ராசி எது?

பொதுவாக துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இரு தாரப்பலன் அமையும் நிலையிருக்கும். இதற்கான காரணம் சந்திர, சுக்கிர சேர்க்கை ஆகும்.

துலாம் ராசிக்கு அடுத்த ராசியாக விருச்சிக ராசியிலேயே சந்திரன் நீச்சம் பெறுகின்ற நிலையும், துலாம் ராசிக்கு சுகபோகஸ்தானமான கன்னி ராசியில் சுக்கிரன் நீச்சம் பெறுவதும் இரண்டு மனைவிகள் அமையும் நிலை ஏற்படுகிறது.

மேலும் சித்திரை, சுவாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங்களின் அதிபதி கிரகமான செவ்வாய், ராகு, குரு ஆகிய கிரகச் சேர்க்கை இதற்கு காரணமாகிறது.

எனவே துலாம் ராசிக்காரர்களுக்கு இரண்டு மனைவிகள் அமையும் பலன் எனும் நிலை அமைகிறது.

ஆனால் இது எல்லோருக்கும் அமையாது. குடும்ப களத்திர நிலை கிரகங்களின் சேர்க்கையும் இதற்கு முக்கிய காரணமாக இருந்தால் மட்டுமே இரண்டு தாரப் பலன்கள் அமையும்.

இரண்டு திருமணம் அமையும் ராசிக்காரரின் ஜாதக நிலை எப்படி இருக்கும்?

ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ஆம் இடத்தில் சூரியன், சனி, செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகங்களின் நிலை அமைவதும், நீச்ச நிலை பெறுவதும் இரண்டு தாரப் பலனைக் கொடுக்கும்.

அதேபோல சூரியன், செவ்வாய் சேர்க்கை, சுக்கிரன், குரு சேர்க்கை என்று ஜாதகத்தில் அமையும் நிலை கூட இரண்டு தாரப் பலனை கொடுக்கும்.

ஜாதகத்தில் கேது, ராகு, சனி, சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்களின் தொடர்புடைய ஒரு சில நட்சத்திரங்களுக்கு இரண்டு தாரப் பலன் பெறுகின்ற நிலை அதிகம் உள்ளது.

English Summary

horoscope 5


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal