திருமண ஆசைகாட்டி 17 வயது சிறுமியை குப்பையாய் கசக்கி வீசிய பூ வியாபாரி! துடிதுடித்து சிறுமி எடுத்த அதிரடி - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள ஆரிக்கம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயபால்.24  வயது நிறைந்த இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். ஜெயபால் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

மேலும் அவரிடம் திருமண ஆசைகாட்டி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் ஜெயபாலுக்கு அவரது பெற்றோர் வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கதீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஜெயபாலன் வீட்டிற்கு சென்ற சிறுமி என்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போகிறாயா என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும்  ஜெயபால் தகாத வார்த்தைகள் பேசி சிறுமியை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். இதனால் மனம் உடைந்த அந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் ஆபத்தான நிலையில் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

பின்னர் இது குறித்து அந்த சிறுமியின் தாய்  அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

English Summary

girl cheated by young man


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal