கைரேகை சாஸ்திரம்... நடுவிரல் இப்படி இருந்தால் இரக்க குணம் கொண்டவர்கள்..!! - Seithipunal
Seithipunal


நடுவிரல், சனி விரல் என்றும், பாம்பு விரல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரலின் அடியில் இருப்பது சனி மேடு. சனி விரலின் கீழ் காணப்படும் வட்டத்திற்கு சனி வட்டம் என்று பெயர்.

மற்ற நான்கு விரல்களை விட நடுவிரல் தான் புத்திசாலியான விரலாகும். நம் திறன்களை இவ்விரல் தான் கேள்வி கேட்கும். அதேபோல் நம் முடிவுகளை பற்றி மீண்டும் ஆலோசிக்க வைக்கும்.

நடுவிரல் சொல்லும் குணாதிசயங்கள் :

பாம்பு விரல் நீண்டும், அகன்றும், கனத்தும் காணப்பட்டால் இவர்கள் பேச்சாலே பிறரை கவரக்கூடியவர்களாக இருப்பார்கள். அதேசமயம் இரக்க குணமும் இருக்கும். கடுமையான முயற்சி செய்து பொருள் சம்பாதிப்பார்கள். நம்பிக்கை உள்ளவர்கள். மனமும், உடலும் உறுதி படைத்தவர்கள்.

நடுவிரல் மோதிர விரலைவிட நீளமாக காணப்பட்டால் சரிசமமான பலன்களை அனுபவிப்பார். அவர்களுக்கு கஷ்ட, நஷ்டங்களை சரிசமமாக அனுபவிப்பார்கள்.

மோதிர விரலும், பாம்பு விரலும் ஒரே அளவு நீட்டமாக இருந்தால் இவர்கள் மற்றவர்களை விட வல்லவர்களாக இருப்பார்கள். 

ஆள்காட்டி விரலை விட பாம்பு விரல் குறைந்து இருந்தால் இவர்களுக்கு சித்த பிரம்மை பிடிக்கக்கூடும். இவர்கள் பிறருக்கு நம்பிக்கை துரோகம் செய்வதால் பல இழப்புக்கு உள்ளாக நேரிடலாம். 

ஆள்காட்டி விரலும், பாம்பு விரலும் சமமாக இருந்தால் இவர்கள் பலப்பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள்.

பாம்பு விரலின் முனை பாகமானது அகலமானதாக இருந்தால் இரக்க சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். கலையின் மேல் இவர்களுக்கு அதிக நாட்டம் இருக்கும்.

நடுவிரலானது எவ்வித கனமும் இல்லாமல் அகலமும் குறைந்து, நீளமும் குறைந்து காணப்படுமானால் இவர்கள் மற்றவர்களுடைய வெறுப்புக்கு ஆளாக வேண்டி வரும். சின்ன சின்ன மகிழ்ச்சி தரும் காரியங்களில் ஈடுபடுவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

finger astrology 3


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->