48 ஆண்டுகள் சமுதாய பணிகளில் இருந்தவர் மறைவு.! வேதனையுடன் முதலமைச்சர் இரங்கல் அறிக்கை.! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆதீன மடத்தின் மடாதிபதி 26-வது குருமகா சந்நிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் நேற்று (டிச.,4) பிற்பகல் தனது 93 வயதில் முக்தியடைந்தார். கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி பரிபூரணம் அடைந்தார்.

தருமபுரத்தில் வித்வான் பட்டம் பெற்ற இவர், கவுரவ பேராசிரியராக பணியாற்றியுள்ளார். தேவஸ்தான பொறுப்பில் அதிக நாட்கள் பணியாற்றிய இவர், கட்டளைத்தம்பிரான் சுவாமியாக சென்னை சமய பிரச்சார நிலையத்தில் பணியாற்றி வந்தார். 1971ம் ஆண்டு நவம்பர் மாதம் தருமபுர ஆதீனத்தின் 26வது மடாதிபதியாக பதவியேற்றார். 49 ஆண்டுகள் மடாதிபதியாக பதவி வகித்த இவர், வயது மூப்பின் காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக, திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற 27 ஆலயங்கள் தமிழகம் மட்டுமின்றி, காசி உள்ளிட்ட இடங்களிலும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தநிலையில், தர்மபுர ஆதீனம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமுறை பயிற்சியும் தமிழில் வித்வான் பட்டமும் பெற்றவர், 48 ஆண்டுகள் சமயப்பணி கல்விப்பணி என பலவற்றிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் தருமபுர ஆதீனம் அன்னாரை இழந்து வாடும் அவரது நண்பர்கள், சிஷ்ய கோடிகள், ஆன்மிக அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்ளகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுயிருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps condolence for dharmapura adheenam death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->