தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை.? உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்பட்ட பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் வானுயர ஓங்கி நிற்கின்ற தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற பிப்ரவரி மாதம் 5- ஆம் தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ளது. டிசம்பர் மாதம் 2-ந்தேதி பாலாலயம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்துக்காக கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலை பூஜைக்காக 178 அடி நீளத்திலும், 108 அடி அகலத்திலும் பந்தல் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைக்காக 110 குண்டங்கள் அமைக்கும் பணிகள் மூன்று பிரிவுகளாக பிரித்து நடைபெற்று வருகிறது.

தஞ்சை குடமுழுக்கு விழாவானது ஆகம விதிப்படி நடைபெற வேண்டுமென ஒரு பிரிவினரும், தமிழ் வழிபாட்டு முறைப்படி நடைபெற வேண்டும் என ஒரு பிரிவினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது  தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கிற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் குடமுழுக்கு நடைபெறுவதால் தடை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழா தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளைக்கு ஒத்திவைப்பு.

23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள தஞ்சை குடமுழுக்கு விழாக்கு தடை கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case filed madurai high court for tanjavur temple issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->