தென் திருப்பதியில் தொடங்கியது பிரம்மோற்சவ விழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு! - Seithipunal
Seithipunal


மலையேறி பெருமாளை தரிசித்து வரும் பக்தர்கள்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை மீது அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலின் பிரம்மோற்சவ விழா தொடங்கியுள்ளது. வருடம் தோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தோம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருமஞ்சனம் பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்த காலசாந்தி பூஜை ஆனது 5 மணிக்கு நடைபெற்றது. இந்த பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை புரிந்து தங்களது காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். இக்கோயிலுக்கு காணிக்கையாக மாடுகள், ஆடுகள், தானியங்கள் மற்றும் விவசாய பொருட்களை தானமாக வழங்குவதால் மக்களின் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். 

மாநிலம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து வசதிகள், மருத்துவ வசதி மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிக அளவு பக்தர்கள் வருகையால் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு 30-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brahmotsava festival started in South Tirupati


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->