வருகிற 30ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம்; தி.மலையின் கார்த்திகை தீப திருவிழா! - Seithipunal
Seithipunal


வரும் 30ம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் அந்த கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெறும்!

அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும்.

இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 24ஆம் தேதி தொடங்குகிறது. மூலவர் சன்னதியின் உள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்று பஞ்ச மூர்த்திகளின் பத்து நாள் உற்சவம் நடைபெறும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக நடைபெறாமல் இருந்தது. பஞ்சரதங்களின் மகா தேரோட்டம் கொடியேற்றத்திற்குப் பிறகு ஏழாம் நாள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. 

அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டு சுமார் 2668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும்.

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி பூர்வாங்கப் பணி மேற்கொள்வதற்காக பந்தக்கால் முகூர்த்தம் வரும் 30ஆம் தேதி காலையில் நடைபெறும். அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் அதிகாலை 5.30 மணிக்கு கன்னியா லக்கினத்தில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற உள்ளது. 

சிவாச்சாரியார்கள் வேதங்கள் ஓத, மங்கள இசை ஒலிக்க பந்தக்கால் நடும் நிகழ்வானது நடைபெறும் என கோயில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bandhakal Mugurtam on 30th for KartikaiDeepam Festival


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->