ஆயுதபூஜை எதற்காக கொண்டாடப்படுகிறது? எப்படி கொண்டாட வேண்டும்.!  - Seithipunal
Seithipunal


ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்துவதற்கு தான்  ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் நினைத்து வணங்குவதே ஆயுதபூஜை . 

ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை வாகனங்கள் உட்பட எல்லா வகை தொழில் உபகாரணபெருட்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து திருநீறு பூசி, பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பாகும்.

வழிபடும் முறை: நாம் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களையும், இயந்திரங்களையும் சுத்தம் செய்து, அதற்கு திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பின்னர் லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி படங்களை வைத்து அதற்கு முன் தேங்காய், பழம் வைத்து விளக்கேற்ற வேண்டும். 

மறுநாள் காலை அதாவது நவமியன்று மறுபூஜை செய்து அதனை கலைக்க வேண்டும். ஆனால், இந்த காலத்தில் உள்ளவர்கள் பூஜை முடிந்த சில மணி நேரத்திலே கலைத்து விடுகின்றனர். இந்த தவறை நீங்கள் செய்துவிடாதீர்கள், மறுநாள் காலை மறுபூஜை செய்து கலைத்துவிடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ayudhapoojai and marupoojai in next day


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->