நாளை அத்திவரதர் தரிசனத்தில் நேரம் மாற்றம்! சிறப்பு தரிசனமும் நேரம் மாற்றம்!  - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் அத்திவரதர் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அதிகாலை 5 மணியில் இருந்து எப்போதும் போல பக்தர்கள் அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் 3-ந்தேதியான நாளை ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளதால் நாளை மதியம் 3 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கோபுர வாசலில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். 

திருக்கல்யாணம் நடைபெறுவதால் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி கிடையாது. திருக்கல்யாணம் முடிந்த பின்னர் இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு வரை தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை 300 ரூபாய் சிறப்பு தரிசனம் மாலை 6 - 9.30 மணிக்கு நடைபெறுவதற்கு பதிலாக, பிற்பகல் 1 மணி முதல் 3 மணிக்கு தரிசன நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aththivarathar tharisana time change for aadi pooram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->