அத்திவரதரை விரைவில் தரிசிக்க புதிய நடைமுறையை கொண்டுவந்த இந்து அறநிலையத்துறை., மக்களிடையே பெருகிய வரவேற்பு!! - Seithipunal
Seithipunal


கடந்த ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 22வது நாளான இன்று மதிய நிலவரப்படி சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ள நிலையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்கு வரிசையில் நின்று காத்து கிடக்கின்றனர். 

கோவில் அருகே ஏற்கனவே 250 தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீட்பு பணிகளுக்காக கூடுதலாக  150 வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார் அதுபோல் குடிநீர் வழங்குதல் புதியவர்களை தரிசனத்துக்கு அழைத்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளை ஏற்கனவே 500 பேர் இருந்த நிலையில் தற்போது 2000 பேர் பணியில் உள்ளனர். கோயிலில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை மினி பேருந்துகள், கார்கள் அனுமதிக்கப்படாமல் ஆட்டோக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. நேற்று விடுமுறையை தினம் என்பதால் கூட்டம் மேலும் அதிகரிகத்து ஒரு நாள் மட்டும் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்த நிலையில் நடந்து முடிந்த 22 நாட்களில் மொத்தம் 33 லட்சத்து மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர்.

இந்தநிலையில்,  அத்திவரதரை ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் பதிவு செய்பவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தி அவர்கள் விரைவாக தரிசிக்க இந்து சமய அறநிலையத்துறை புதிய நடைமுறையை கொண்டுவந்தது. இதையடுத்து 300 ரூபாய் கட்டணத்தில் ஆன்லைன் பதிவு செய்து தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் சராசரியாக 500 -ராக இருந்த நிலையில் தற்போது 500-லிருந்து, 2000 நபர்களாக உயர்ந்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

athivarthar 300 rupee seprate queue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->