அத்திவரதரரை தரிசிக்க வரும் பக்தர்களில் எண்ணிக்கை இந்த  நாளில் அதிகரிக்கும்!! அலெர்ட்டான மாவட்ட நிர்வாகம்!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அனந்தஸரஸ் என்ற தீர்த்தத்தினுள் அத்திவரதர், அனந்த சயனராக ஆனந்த யோகம் கொண்டிருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த அத்திவரதர் அந்தத் திருக்குளத்தை விட்டு வெளியே வந்து தரிசனம் தருகிறார். இந்த கணக்குப்படி அடுத்த தரிசனம் இந்த ஆண்டு நமக்கு கிடைத்துள்ளது. அப்போது 48 நாட்கள் மட்டுமே வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பிறகு மறுபடியும் நீருக்குள் சயனம் கொள்ள ஆரம்பித்துவிடுவார்.

நேற்று, ஆடிக்கிருத்திகை, மற்றும் மேலும் ஆடிக்கிருத்திகையை  முன்னிட்டு பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டதால், நேற்று அத்திவரதரை தரிசிக்க கூட்டம் அலை மோதியது. விஐபி தரிசனம் செய்யும் இடத்தில் ஏற்படும் நெரிசலால், பக்தர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் விடுமுறை தினங்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் புதன்கிழமை வரை அத்திவரதர் சயன கோலத்திலும், அடுத்த மாதம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நின்ற கோலத்திலும் காட்சியளிக்க உள்ளார். நின்ற கோலத்தில் அத்திவரதரை தரிசிக்க வழக்கத்தை விட கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்காக காஞ்சிபுர ஆட்சியர் தலைமைலான மாவட்ட நிர்வாகம் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது 5,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில். பக்தர்களுக்கு குடிநீர், அன்னதானம், குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் தொண்டு நிறுவங்கள் சார்பில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

athivarathar temple security incresed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->