அத்திவரதருக்க்காக இயக்கப்பட்ட மினி பேருந்து மூலம் இத்தனை கோடி வசூலா? போக்குவரத்துத் துறை வெளியிட்ட தகவல்! - Seithipunal
Seithipunal


அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்கதர்களுக்கு வசதியாக காஞ்சிபுரம் நகர் முழுவதும் தமிழக அரசு சார்பில் 45 மினிபேருந்துகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகிறது. இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாக தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் நகர் காஞ்சிபுர நகர் பகுதிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தற்காலிக பேருந்து நிலையம் அருகே தடுத்து நிறுத்தப்படுகிறது. இதனால்,வாகனங்களில் வந்த பக்தர்கள் மினி பேருந்து மூலம் அத்திவரதர் கோயிலுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இதைக்காக மினி பேருந்துகளில் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

இந்த மினி பேருந்துகள் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை இரு மார்க்கத்திலும் இயக்கப்படுவதால் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் பயணிக்க முடிவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஆகஸ்ட் 1 ஆம் முதல் கடந்த 32 நாட்களில் சுமார் 15 லட்சம் பேர் அத்திவரதர் கோயிலுக்கு மினி பேருந்து மூலம் பயணித்ததால் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் ஈட்டியுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளதால் மதியம் 3 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கோபுர வாசலில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். 

திருக்கல்யாணம் நடைபெறுவதால் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி கிடையாது. திருக்கல்யாணம் முடிந்த பின்னர் இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு வரை தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று 300 ரூபாய் சிறப்பு தரிசனம் மாலை 6 - 9.30 மணிக்கு நடைபெறுவதற்கு பதிலாக, பிற்பகல் 1 மணி முதல் 3 மணிக்கு தரிசன நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

athivarathar mini bus collection


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->