புதிய கோலத்தில் அத்திவரதர்., அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த 31 நாட்களில் ஏறத்தாழ 48 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் மேற்கொண்டுள்ளனர். 

அத்திவரதர் வெளிவந்த  நாள் முதல் அனந்த சயன கோலத்தில் காட்சியளித்து வந்தார். நேற்று மாலை 5 மணியுடன் சயன திருக்கோலத்தில் அருள் பாலிக்கும் அத்தி வரதரை தரிசிப்பதற்கு உண்டான கால அவகாசம் நிறைவடைந்தது. . இதையயடுத்து, இன்று(ஆகஸ்டு 1 ஆம் தேதி)  காலை சரியாக 5:25 மணிக்கு நின்ற திருக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நாளை முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் அத்திவரதர்  காட்சியளிக்க உள்ளார். அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அமைதியாக வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த மாதம் 1 ஆம் தேதி முதல் சயன காட்சியளித்து வந்த அத்திவரதரை தரிசனம் மேற்கொண்டவர்கள் மீண்டும் இன்று முதல் நின்ற திருக்கோலத்தில் காண வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சராசரியாக ஒரு நாளைக்கு 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

athivarathar dharisanam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->