6 மணி நேரம் மட்டும் தெரியும் அதிசய சிவன் கோவில்! - Seithipunal
Seithipunal


மக்கள் வாழும் நிலப்பரப்பில் அதிகளவில் கோவில்களை அமைந்துள்ளது. ஆனால் குஜராத் மாநிலத்தில் உள்ள கோலியாக் இடத்தில் நிஷ்களங்கேஸ்வர் என்னும் சிவன் கோவில் கடலுக்குள்ளே அமைந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில், அகமதாபாத் மாவட்டத்தில், பவநகர் என்னும் ஊருக்கு அருகே உள்ளது 'கோலியாக்" என்ற கடற்கரை கிராமம் உள்ளது. இந்த கடற்கரையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. எல்லா நேரங்களிலும் இந்த ஆலயத்தை பார்க்க முடியாது.

ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் சுமார் 6 மணி நேரம் மட்டும் கடல் உள்வாங்கி சிவாலயம் வெளியில் தெரியும். அதிலும் இந்த அதிசய சம்பவம் தினமும் அதே நேரத்தில் நடைபெறுவது மேலும் வியப்பை அளிக்கக்கூடிய சம்பவமாக இருக்கிறது.

ஏனென்றால் தினந்தோறும் பகல் ஒரு மணி முதல் இரவு பத்து மணி வரை கடல் தண்ணீரை உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட முடியும். நீர்மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைக்கு வந்துவிடுகின்றனர்.

பௌர்ணமி காலங்களில் அதிக தூரம் கடல் உள்வாங்கும். ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் பல மணி நேரம் கடல் உள்வாங்கிய நிலையில் காணப்படும். கடல் உள்வாங்க மக்கள் அப்படியே நடந்து போகலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

athisaya shiva temple only 6 hours


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->