அட்சயதிருதி நாளில் வீட்டில் வைத்து வணங்க வேண்டிய சங்கு, சக்கரம் மற்றும் மாலை.! - Seithipunal
Seithipunal


காரணமின்றி எவ்விதமான துன்பங்களையும் மனித குலம் அடைய வேண்டாம் என்றுதான் அனைத்து மகான்களும் விரும்பினார்கள். அதற்கேற்ப பல்வேறு வழிபாடுகளையும், இறையருளை பெற்று தரக்கூடிய சாதனங்களையும் அடையாளம் காட்டியதோடு, அவற்றை எவ்வாறு தக்க வழிகளில் பயன்படுத்துவது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

அந்தவகையில் செல்வத்தின் அம்சமான மகாலட்சுமி வாசம் செய்யும் தாமரை மணிமாலை, கோமதி சக்கரம் மற்றும் வலம்புரி சங்கு இவை மூன்றும் ஒன்று சேர்த்து அட்சய திருதி நாளில் வழிபாடு செய்வதன் மூலம் வீட்டில் வற்றாத செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

மேலும், செல்வத்திற்கு அதிபதியான குபேரரே அட்சய திருதி நாளில் மகாலட்சுமி தாயை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.

அட்சய திருதியன்று பூஜை செய்யும் முறைகள் :

கோமதி சக்கரம் :

கோமதி சக்கரத்தை காய்ச்சாத பசும்பாலில் அபிஷேகம் செய்தபின்பு தூய்மையான நீரில் கழுவி நன்றாக துடைத்து மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு செம்பு தட்டில் சிவப்பு வண்ண துணியின் மீது கோமதி சக்கரத்தை பிரதிஷ்டை செய்து, பூ வைத்து மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பாகவோ அல்லது பெருமாளின் திருவுருவப் படத்திற்கு முன்பாகவோ உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்.

வலம்புரி சங்கு :

வலம்புரி சங்கை சுத்தமான நீரில் அலம்பி சந்தனம், குங்குமம் இட்டு பிளந்த பாகம் வெளிப்பக்கமாக வைத்து மஞ்சள் பொடி சிறிது இட்டு நீர் ஊற்றியபின் மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக வைக்க வேண்டும்.

தாமரை மணிமாலை :

தடைகளை நீக்கி உயர்வான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் தரும் தாமரை மணிமாலையை மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக வைத்து மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை செய்து வீட்டில் உள்ளவர்கள் அணிந்து கொள்ளலாம் அல்லது பூஜை அறையிலும் வைத்துக் கொள்ளலாம்.

தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கி வைப்பதை காட்டிலும் மகாலட்சுமியின் அம்சமாகவும், எப்போதுமே புனிதப்பொருட்களாக சொல்லப்படும் தாமரை மணிமாலை, கோமதி சக்கரம் மற்றும் வலம்புரி சங்கு இவை மூன்றையும் ஒன்று.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

atchaya thiruthi sangu sakkaram malai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->