இந்த ராசிக்காரர்களுக்கு  தாயின்மேல் அதீத பாசம் இருக்குமாம்..! - Seithipunal
Seithipunal


மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசி, லக்னத்தில் பிறந்திருப்பார்கள். அதன்படி ஒவ்வொரு ராசியினருக்கும், ஒவ்வொருவிதமான பழக்கம், யோகம் போன்றவை அவரவர் ராசியைப் பொறுத்து அமையும்.

அந்த வகையில், 2வது ராசியான ரிஷப ராசிக்குரிய பொதுவான குணநலன்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

ரிஷப ராசி : 

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார்.

ரிஷப ராசியில் கிருத்திகை முதல் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் ஆகியவை அடங்கும்.

ரிஷப ராசியின் வேறு பெயர்கள் :

மால், விடை, பாறல், புல்லம், நந்தி, மா, பசு, பாண்பில், ஏறு, மாடு.


பொதுவான குணங்கள் : 

எழில்மிகு மற்றும் கம்பீரமான தோற்றம் உடையவர்கள்.

நடுத்தரமான உயரம் கொண்டவர்கள்.

சாதுவான குணத்தை கொண்டிருப்பார்கள்.

பொதுநலம் சார்ந்த சிந்தனைகளை கொண்டவர்கள்.

சாமர்த்தியமான செயல்பாடுகளை செய்யக்கூடியவர்கள்.

வேடிக்கையாக பேசி அனைவரையும் கவரக்கூடியவர்கள்.

நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள்.

அதிக நினைவு திறன் உடையவர்கள்.

அனைவரிடமும் அனுசரித்து செல்லக்கூடியவர்கள்.

எந்தவொரு செயலையும் திட்டமிட்டு செயல்படுத்தக்கூடியவர்கள்.

தாயின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

கடினமாக உழைக்கக்கூடியவர்கள்.

கலைத்துறையில் ஆர்வம் உடையவர்கள்.

புகழ்ச்சிக்கு செவி சாய்க்காதவர்கள்.

 எதிலும் சிக்கனமாக செயல்படக்கூடியவர்கள்.

பல மொழிகளை அறிந்தவர்கள்.

சகோதரர்களிடம் அதிக அன்பு கொண்டவர்கள்.

பார்த்தவுடன் மற்றவர்களை கணிக்கக்கூடியவர்கள்.

அதீத கற்பனை திறன் உடையவர்கள்.

நுண்கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

ரகசியங்களை காக்கும் குணம் உடையவர்கள்.

மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

சிறுவயதிலேயே குடும்ப பொறுப்பை ஏற்று திறம்பட செயலாற்றக்கூடியவர்கள்.

எந்த சூழ்நிலை ஆனாலும், அதை சமாளிக்கும் திறமை கொண்டவர்கள்.

எதிரிகளை வீழ்த்தும் சாதுர்யமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

astrology for this raasi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->