கடலுக்குள் அமைந்துள்ள தீர்த்தங்கள்... உலக புகழ்பெற்ற தலம்..!! - Seithipunal
Seithipunal


இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் :

அமைவிடம் : 

இந்து மதத்தில் மிக உன்னத புராணங்களாக ராமாயணம், மகாபாரதம் உள்ளது. அதில் ராமாயணத்தில் ராமபிரான் இலங்கைக்கு சென்று இராவணனை கொன்று, சீதையை மீட்டு, இராமேஸ்வரத்தில் அதன் பாவத்தை போக்கிக் கொள்ள சிவலிங்கத்தை வடிவமைத்து வழிபட்ட இடம் தான் தற்போது இராமேஸ்வரம் இராமநாதர் சுவாமி கோயிலாக நாம் வணங்கி வருகின்றோம். இந்த திருத்தலம் ராமேஸ்வரம் தீவில் உள்ளது.

மாவட்டம் : 

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில், இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டம்.

எப்படி செல்வது?

சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து ரயில் வசதி உண்டு. பேருந்து வசதியும் மதுரை, திருச்சியில் இருந்து இருக்கிறது.

கோவில் சிறப்பு :

இந்த கோயில் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும், 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது தான் மிக சிறப்பாக கருதப்படுகிறது. ஆலயத்தில் 22 தீர்த்தங்களும், வெளியே 22 தீர்த்தங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆலயத்தில் இருக்கக்கூடிய 22 தீர்த்தங்கள் கிணறுகளாக அமைந்துள்ளன. வெளியே இருக்கக்கூடிய 22 தீர்த்தங்கள் கோயிலுக்குக்கு எதிரே அமைந்துள்ள அக்னி தீர்த்தம் எனும் கடலில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

1212 தூண்கள், 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம் உலகப்புகழ் பெற்றது.

கோவில் திருவிழா :

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

வேண்டுதல் :

இரட்டை விநாயகரை குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் வேண்டிக்கொள்கின்றனர். நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அக்னி தீர்த்தக்கரையில் நாகர் பிரதிஷ்டை செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன் :

வேண்டுதல் நிறைவேறியதும் சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

கோவில் பிரசாதம் :

ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arulmigu ramanathaswamy temple in rameswaram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->