இன்றைய திருத்தலம்... மயூரப்பிரியின்... ஜோதி வழிபாடு... வேறென்ன சிறப்புகள்? - Seithipunal
Seithipunal


அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் :

இன்று நாம் பார்க்கவிருக்கும் திருத்தலம்... அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயில்.

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் ஐவர் மலை எனுமிடத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

இத்தலத்தில் அப்படியென்ன சிறப்பு?    

குழந்தை வேலப்பர் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. முருகனின் திருவுருவம் வேறு எந்த கோயிலிலும் காணப்படாத திருவுருவம் ஆகும். 

குழந்தை வேலப்பர் தோகை விரித்த மயிலின் முன், மயிலின் கழுத்தை இடக்கையில் அனைத்தவாறும் வலக்கையை இடுப்பில் ஊன்றியபடியும், சர்ப்பம் பாதத்தருகே படம் எடுத்த நிலையிலும் அமைந்திருப்பது சிறப்பாகும். 

இந்த அமைப்புள்ள முருகனை 'மயூரப்பிரியின்" என்பர். இத்தோற்றத்தை அபிஷேகத்தின் போது மட்டும் தான் காண இயலும். அலங்காரத்தில் இத்தோற்றம் மறைந்து விடும். 

வேறென்ன சிறப்பு?

கோயில் வெளிப்பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள நவகிரக மண்டபத்தில், நவகிரகங்கள் வட்ட வடிவில் அமைந்துள்ளது. ஒரு வித்தியாசமான அமைப்பு. 

கோயில் முன் சுற்றுசுவற்றுக்கு வெளியே விளக்கு தூண் உள்ளது.    

முருகன் கோயிலின் எதிரே உள்ள வள்ளலார் ஜோதி மண்டபத்தைக் கடந்தால் ஒரு சுனை உள்ளது. அதற்கருகில் உள்ள மிகப் பெரிய பாறையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயில் உள்ளது. இம்மலையின் மிக உயரமான பகுதி இதுவேயாகும். இக்கோயிலுக்குச் செல்ல பாறை மீது படிகளைச் செதுக்கி உருவாக்கி உள்ளனர். 

ஐவர் மலையில் ஜோதி வழிபாடு திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் நடைபெற்று வந்தது. அப்பகுதிக்கு விஜயம் செய்த வாரியார் சுவாமிகள் இந்த ஜோதி வழிபாட்டில் கலந்து கொண்டார் என்பது சிறப்பு.

இக்கோயிலில் என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

விநாயகர் சதுர்த்தி இக்கோயிலில் முக்கிய திருவிழாவாகும். இத்தலத்தில் அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை ஆகிய தினங்களில் விசேஷ பூஜை, அலங்கார ஆராதனைகள் உண்டு. 

வள்ளலார் கோயில் இருப்பதால் தைப்பூசமும், கார்த்திகை தீபமும் வருட முக்கிய திருவிழாக்களாக கொண்டாடப்படுகின்றன. கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் நடப்பதைப் போன்றே சொக்கப்பனை கொழுத்தி தீபம் ஏற்றுவது முக்கிய நிகழ்வாகும்.

எதெற்கெல்லாம் இங்கு பிரார்த்தனை செய்யலாம்?

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்யப்படுகிறது. வேண்டுவோரின் பாவ வினைகள் தீர்த்து குழந்தை வடிவம் கொண்டு தன்னை வழிபடும் பக்தர்களை அருள்பாலித்து வருகிறார் குழந்தை வேலப்பர்.

     இக்கோயிலில் என்னென்ன நேர்த்திக்கடன் செலுத்தலாம்?

குழந்தை வேலப்பருக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arulmigu kuzhandhai velappar temple


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->