இனிய திங்கள் காலை வணக்கத்துடன்... இன்றைய ராசிபலன்கள்...!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

தாயின் ஆதரவால் கவலைகள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் ஏற்படும். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் உள்ள தடைகள் அகலும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். 

ரிஷபம்:

வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பதற்றாமின்றி நிதனத்துடன் உயர் அதிகரிகளிடம் பேசவும். பொன் போன்ற ஆபரணங்களை கையாளும் போது கவனம் வேண்டும். செய்யும் பணியில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும்.

மிதுனம்:

இளைய சகோதரர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள்.  மகான்களின் ஆசிகள் கிடைக்கும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நீண்ட நாள் எண்ணிய எண்ணங்களை தைரியத்துடன் நடைமுறைப் படுத்துவீர்கள்.

கடகம்:

தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவால் சாதகமான சூழல் உண்டாகும்.  உயர் அதிகாரிகளின் உதவிகளால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள்  சாதகமாக அமையும். 

சிம்மம்:

பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். கால்நடைகளிடம் கவனமாக இருக்கவும். பூமி விருத்தி செய்வதற்கான சாதகமான சூழல் அமையும்.  போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும். வீண் கவலைகளால் மனம் வருந்துவீர்கள். நீண்ட நாள் செய்ய முடியாத வேலைகளை முடிப்பீர்கள். 

கன்னி:

அந்நியர்களின் நட்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். பொதுப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். மற்றவர்களுடன் பேசும் போது கவனம் வேண்டும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும்.

துலாம்:

எதிர்காலம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் மேம்படும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் மற்றும் பதற்றமான சூழல் அமையும். வழக்குகளில் எதிர்பார்த்த  முடிவுகளில் காலதாமதம் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

விருச்சகம்:

சுபச்செய்திகள் வந்தடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல்  உண்டாகும். போட்டிகளில் கலந்து கொண்டு  வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்ட பணிகளை இனிதே முடித்து வெற்றி காண்பீர்கள். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும்.

தனுசு:

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் நன்மை உண்டாகும். சந்தேக உணர்வால் நெருக்கமானவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நேரிடலாம். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். 

மகரம்:

பொதுக் கூட்டப் பேச்சுக்களில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காது. உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

கும்பம்:

நீர் நிலை சம்பந்தமான தொழில்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வாகனம் தொடர்பான செயல்பாடுகளில் இலாபம் உண்டாகும்.

மீனம்:

இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தாயை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க காலதாமதமாகும்.    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

apr 06 rasipalan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->