அம்மனுக்கு முகம் வியர்க்கும் அதிசய ஆலயம்.....! - Seithipunal
Seithipunal


பொதுவாக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிச் சிறப்பு இருக்கும். அதில் பல அபூர்வமான விஷயங்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கும். அதேபோல தான் தேனி மாவட்டம் சின்னமனூரில் அமைந்துள்ள பூலாநந்தீஸ்வரர் திருக்கோவிலிலும் பல ஆச்சரியமான தகவல் உள்ளது.

எப்பொழுதும் வியர்க்கும் அம்மன் :

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் திருநாமம் சிவகாமி அம்மன் என்பதாகும். இங்கிருக்கும் அம்மனுக்கு முகம் எப்பொழும் வியர்த்துக் கொண்டே இருக்கிறது. அர்ச்சகர்கள் எவ்வளவோ தடவை அம்மனுக்கு அலங்காரங்கள் செய்தாலும் முகம் மட்டும் வியர்த்தபடியே இருப்பது அதிசயம்.

அளவுக்கு அளவான லிங்க காட்சி :

பார்க்கிறவர்களின் பார்வை எந்த அளவுக்கு உயரமோ அதே அளவு உயரமாக லிங்கம் காட்சி தரும் அதிசயத்தை காணலாம். இவ்வூரில் பிறப்பவர்களுக்கு முக்தி தரும் சிறப்புடைய சிவதலம். லிங்கம்
வெட்டுப் பட்ட நிலையில் உள்ளது. மன்னன் ஆலிங்கனம் செய்த அடையாளமாக இப்போதும் லிங்கத்தின் மீது மன்னனின் மார்புக் கவசத் தடம் இருக்கிறது.

கல்லாக மாறும் எலும்புகள் :

இவ்வூரில் இறப்பவர்களின் எலும்புகள் சுரபி நதியில் விழுந்தால் கல்லாக மாறிவிடும் என்ற ஐதீகம் உள்ளது.

பூ நடுவில் லிங்கம் :

இங்குள்ள மரத்தில் நாகலிங்க பூ பூக்கிறது. இப்பூவின் நடுவில் லிங்கம் போன்றும் அதற்கு ஆதிஷேசன் போல் குடையாக லிங்கத்தின் மீது இருப்பது அதிசயமாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amman temple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->